மேஷ ராசியினருக்கு யோகமான நாள் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
14 hours ago
மேஷ ராசியினருக்கு யோகமான நாள் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: யோகமான நாள். திட்டமிட்ட செயலில் முயற்சியில் வெற்றியடைவீர். எதிர்பார்த்த வருவாய் வரும். அலுவலகத்தில் இருந்த நெருக்கடி விலகும்.பரணி: வியாபாரியின் எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் ஆதரவு பெருகும்.கார்த்திகை 1: வெளியூர் பயணம் வெற்றியாகும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்கள் துணையுடன் வேலையை செய்து முடிப்பீர்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வியாபாரி லாபம் காண்பர்.ரோகிணி: நேற்றைய எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். இழுபறியாக இருந்த வழக்கு முடியும். தொழில் எதிரி விலகிச்செல்வர். மிருகசீரிடம் 1,2: உடல்நிலை சீராகும். வரவேண்டிய பணம் வரும். விருப்பம் பூர்த்தியாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட சிக்கல்களை பேசித் தீர்ப்பீர்.திருவாதிரை: ஒரு சிலர் கோயில் வழிபாட்டை மேற்கொள்வீர். பிள்ளைகள் கல்வி குறித்து அக்கறை எடுப்பீர். புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள்.புனர்பூசம் 1,2,3: உங்கள் செயல் வெற்றியாகும். தொழிலில் பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிறருக்கு உதவி செய்வீர். எதிர்பார்த்த பணம் வரும்.

கடகம்

புனர்பூசம் 4: முன்னேற்றமான நாள். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த தகவல் வரும். கவனமுடன் செயல்பட நினைத்தது நிறைவேறும்.பூசம்: சுறு சுறுப்பாக செயல்படுவீர். காலையிலேயே எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தை ஒட்டி வெளியூர் பயணம் ஏற்படும்.ஆயில்யம்: தொழிலில் ஏற்பட்ட சிக்கல்களை சரி செய்வீர். உங்கள் அணுகுமுறையால் வியாபாரத்தில் லாபம் உண்டாகும். சங்கடம் நீங்கும்.

சிம்மம்

மகம்: முன்னேற்றமான நாள். உங்கள் வேலை இன்று எளிதாக நடக்கும். வருவாய் அதிகரிக்கும். உடல்நிலையில் எச்சரிக்கை அவசியம்.பூரம்: விமர்சனங்களை ஒதுக்கி வைத்து செயல்படுவீர். நினைத்ததை சாதிப்பீர். சகோதரர்களால் லாபம் உண்டாகும். முயற்சி வெற்றியாகும்.உத்திரம் 1: மற்றவரால் செய்ய முடியாத வேலையை செய்து முடிப்பீர். உழைப்பாளர் நிலை உயரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை நன்மை தரும்.அஸ்தம்: வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் வந்திணைவர். பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எண்ணம் பூர்த்தியாகும்.சித்திரை 1,2: கடன் கொடுத்திருந்த பணம் வரும். நிதிநிலை உயரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது.

துலாம்

சித்திரை 3,4: மனக்குழப்பம் விலகும். உங்கள் செயலில் தெளிவு இருக்கும். நினைத்ததை சாதிப்பீர். ஒரு சிலர் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்.சுவாதி: ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் புதிய முயற்சி வேண்டாம். வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.விசாகம் 1,2,3: விலகிச் சென்ற வாடிக்கையாளர் உங்களைத் தேடி வருவர். செய்து வரும் தொழில் முன்னேற்றமடையும். லாபம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

விசாகம் 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். திடீர் செலவால் சங்கடத்திற்கு ஆளாவீர். தொலைந்து போன பொருள் கைக்கு வரும். அனுஷம்: உழைப்பின் வழியே சாதகமான நிலையைக் காண்பீர் அலைச்சல் அதிகரிக்கும். மனம் சோர்வடையும்.கேட்டை: வரவு செலவில் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வாகனப் பயணத்தில் சில சங்கடம் தோன்றும். உடல்நிலையில் சிறு சங்கடம தோன்றும்.

தனுசு

மூலம்: விருப்பம் பூர்த்தியாகும் நாள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். தம்பதிக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். பூராடம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் எண்ணம் நிறைவேறும்.உத்திராடம் 1: வரவேண்டிய பணம் வரும். உங்கள் விருப்பம் நிறைவேறும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். திட்டமிட்டு செயல்பட்டு எதிர்பார்த்த லாபமடைவீர். பண நெருக்கடி நீங்கும்.திருவோணம்: தொழிலை விரிவு செய்வதற்காக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். உங்கள் எண்ணம் பூர்த்தியாகும். பிடிவாதத்தை விட்டு பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.அவிட்டம் 1,2: வெளியூர் பயணம் லாபம் தரும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு வருவாய் அதிகரிக்கும்.

கும்பம்

அவிட்டம் 3,4: நன்மையான நாள். நேற்றுவரை தடைபட்டிருந்த முயற்சி எளிதாக நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.சதயம்: பெரியோர் உதவியால் வேலை நடந்தேறும். விருப்பம் பூர்த்தியாகும். எதிர்பார்த்த உதவி சரியான நேரத்தில் கிடைக்கும்.பூரட்டாதி 1,2,3: உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். தடைபட்டிருந்த பணம் வரும். நவீன பொருட்கள் வாங்குவீர்.

மீனம்

பூரட்டாதி 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் செயல்களில் எதிர்பாராத தடை தோன்றும். அலுவலகப் பணியில் சிறு சங்கடம் தோன்றும்.உத்திரட்டாதி: வழக்கமான வேலைகளிலும் இன்று கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்றப் பிரச்னை தேடி வரும்.ரேவதி: மனக்குழப்பம் இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். நிதானமாக செயல்படுவது நல்லது.

மேலும் ஆன்மீகம் தொடர்பான செய்திகளை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

https://www.lanka4.com/category/spirituality

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!