“தூய்மையான இலங்கை” தேசிய வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பம்!

#SriLanka
Thamilini
1 year ago
“தூய்மையான இலங்கை” தேசிய வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பம்!

புத்தாண்டு கடமைகளின் ஆரம்பமான இன்று (01) அனைத்து அரச நிறுவனங்களிலும் உத்தியோகபூர்வ வைபவம் இடம்பெறவுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. 

 இது தொடர்பில் அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டப்பூர்வ சபைகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை விடுத்து  அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

 புதிய வருடத்தில் “தூய்மையான இலங்கை” தேசிய வேலைத்திட்டத்துடன் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 பொதுத்துறை மற்றும் தனியார் துறையினரால் முன்னெடுக்கப்படும் தூய்மையான இலங்கை வேலைத்திட்டத்தின் ஆரம்பம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. 

 இதன்படி, பொது நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தில் உள்ள ஏனையவர்களின் பங்கேற்புடன் ஒரே நேரத்தில் தமது பணியிடங்களில் பணிபுரிய ஆரம்பிக்க வேண்டும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. 

 தூய்மை இலங்கை நிகழ்ச்சித் திட்டத்தைத் தொடங்கும் தேசிய விழாவை அனைத்து அரசு மற்றும் தனியார் இலத்திரனியல் அலைவரிசைகள் ஊடாக ஒலிபரப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், அதனைக் காணும் வசதியை அனைத்து அரச நிறுவன ஊழியர்களுக்கும் வழங்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 இதன்படி, அனைத்து அரச ஊழியர்களும் தூய்மையான இலங்கை உறுதிமொழியை வாசிக்க நேரலையில் இணையுமாறு பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தனது சுற்றறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4