ஐக்கிய அரபு அமீரகத்தில் விபத்துக்குள்ளான விமானம் : இருவர் பலி!
#SriLanka
Dhushanthini K
2 days ago
ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறிய ரக விமானம் ஒன்று கடலில் விழுந்து நொறுங்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
விமானியாகப் பணியாற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரும், துணை விமானியாகப் பணியாற்றிய 26 வயதான பாகிஸ்தானிய பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த மருத்துவர், தனது குடும்ப உறுப்பினர்களுடன் காற்றில் இருந்து பார்க்கும் அனுபவத்தைப் பெறும் நோக்கில் விமானத்தை வாடகைக்கு எடுத்துள்ளார்.
ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் விபத்துக்குள்ளானது.