விடுதலைப் புலிகள் மஹிந்தவைக் கொல்ல முயற்சிக்கவில்லை! பொன்சேகா

#SriLanka
Mayoorikka
2 days ago
விடுதலைப் புலிகள் மஹிந்தவைக் கொல்ல முயற்சிக்கவில்லை! பொன்சேகா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படலாம் என்ற வதந்திகளுக்குப் பதிலளித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி அவரைக் கொல்லும் அளவுக்கு முட்டாள்கள் யாரும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

 ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொன்சேகா, ஆளில்லா விமானங்கள் விலையுயர்ந்த உபகரணங்கள் என்றும், ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி அவரைத் தாக்க யாரும் தயாராக இல்லை என்றும் கூறினார்.

 “யுத்தம் உச்சக்கட்டத்தில் நடந்த காலத்திலும் மகிந்தவுக்கு அச்சுறுத்தல் இருக்கவில்லை, விடுதலைப் புலிகள் ஒருபோதும் அவரைக் கொல்ல முயற்சிக்கவில்லை. 2010 ஆம் ஆண்டு தேர்தல் வெற்றியின் பின்னர் மஹிந்தவினால் எனது இராணுவப் பாதுகாப்பு எவ்வாறு முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டது என்பதை நான் நினைவுகூர விரும்புகின்றேன். அப்போது நான் அச்சுறுத்தலுக்கு உள்ளாகவில்லையா? என்று கேள்வி எழுப்பினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!