உயர்தர சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு ஈர்க்க திட்டமிடும் அரசாங்கம்!

#SriLanka #Tourism
Thamilini
1 year ago
உயர்தர சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு ஈர்க்க திட்டமிடும் அரசாங்கம்!

உயர்தர சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு ஈர்க்கும் வகையில் சுற்றுலாத் துறையின் தரத்தையும் அதிகரிக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

 2024 ஆம் ஆண்டில் இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்கை இலங்கை அடைந்துள்ளதாகவும், 2025 ஆம் ஆண்டில் மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்க்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். 

 "சுற்றுலா துறையில் தரத்தை அதிகரிக்க வேண்டும். சுற்றுலாத்துறையில் தரத்தை அதிகரிப்பதன் மூலம் உயர்தர சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு ஈர்க்க முடியும். சுற்றுலா என்பது ஒரு தொழில் மட்டுமல்ல, இது நமது வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். 

 சுற்றுலா விசாவில் வரும் சில சுற்றுலாப் பயணிகள் நாட்டில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகத் தெரிவித்த அமைச்சர், சுற்றுலாத் துறையில் தரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4