அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு!

#SriLanka #Britain #Snow
Dhushanthini K
1 day ago
அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு!

அமெரிக்காவின் மத்திய பகுதியை பாதித்த பனிப்புயல் அடுத்த சில நாட்களில் கிழக்கு பகுதியை நோக்கி நகரும் என அந்நாட்டின் தேசிய வானிலை மையம் அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 பனிப்புயல் அபாயம் காரணமாக, வர்ஜீனியா உள்ளிட்ட பல பகுதிகளில் அவசர நிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பனிப்புயலுடன் ஏற்படும் பனிப்பொழிவு ஒரு தசாப்தத்தில் மிக அதிகமான பனிப்பொழிவாக இருக்கலாம் என்று அமெரிக்க வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை, பிரித்தானியாவின் பல பகுதிகள் குளிர் காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சில பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 11 பாகை செல்சியஸை எட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

கடும் பனிப்பொழிவு காரணமாக இங்கிலாந்தின் பல விமான நிலையங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இதன் காரணமாக மான்செஸ்டர், பர்மிங்காம் உள்ளிட்ட பல விமான நிலையங்களின் ஓடுபாதைகள் தற்காலிகமாக மூடப்பட உள்ளது. 

 வடக்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில் 25 செ.மீ பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதேவேளை, ஜேர்மனியில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!