பிரான்சில் குரங்கு அம்மை நோயால் பெண் ஒருவர் பாதிப்பு
#France
#Women
#Disease
#MonkeyPox
Prasu
1 day ago
சமீப காலமாக பல நாடுகளில் பரவிவரும் குரங்கம்மை நோய், பிரான்ஸ் நாட்டுக்குள்ளும் நுழைந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பிரான்சின் பிரிட்டனி பகுதியிலுள்ள Rennes நகரில் அமைந்துள்ள ஒரு மருத்துவமனையில், ஒரு பெண்ணுக்கு Mpox அல்லது monkeypox என அழைக்கப்படும் குரங்கம்மை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
குரங்கம்மை ஆப்பிரிக்காவிலிருந்து தோன்றியதாக கருதப்படும் நிலையில், ஆப்பிரிக்காவுக்கு பயணிப்போருக்கு இத்தொற்று பரவுவதாக கருதப்படுகிறது.
ஆக, பிரான்சில் குரங்கம்மைத் தொற்றுக்கு ஆளாகியுள்ள பெண்ணைக் குறித்து செய்தி வெளியிட்டுள்ள ஊடகங்கள், அவர் ஆப்பிரிக்காவுக்குச் செல்லவில்லை என்றும், ஆனால், ஆப்பிரிக்கா சென்று திரும்பிய இருவருடன் அவர் தொடர்பிலிருந்ததாகவும் தெரிவித்துள்ளன.