விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை விடுவிப்பு!

#SriLanka
Thamilini
1 year ago
விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை விடுவிப்பு!

விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின் கூற்றுப்படி, 2024 ஆம் ஆண்டுக்கான நட்டஈடு கொடுப்பனவுகளில் 90% தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

 பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை அவர்களது கணக்குகளில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பேமசிறி ஜாசிங் ஆராச்சி சுட்டிக்காட்டுகிறார். 

அதன் கீழ், 6,459 விவசாயிகளுக்கு 5,246 ஏக்கருக்கு 100 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளதுடன், பயிர் சேதம் பரிந்துரைக்கப்பட்ட பின்னரும் இழப்பீட்டுத் தொகை கணக்கிடப்படாவிட்டால், மேல்முறையீடு செய்ய அவர்களுக்கு உரிமை உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.  

 வழங்கப்படாத மாவட்டங்களில் இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின் தலைவர் திரு.பேமசிறி ஜாசிங் ஆராச்சி குறிப்பிடுகின்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4