கனடாவின் அடுத்த பிரதமர் யார்?

#PrimeMinister #Election #Canada #Resign
Prasu
22 hours ago
கனடாவின் அடுத்த பிரதமர் யார்?

கனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்வதாக அறிவித்தார். மேலும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் கனடாவின் புதிய பிரதமராக யார் தேர்வு செய்யப்பட உள்ளார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.பிரதமர் பதவி போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் உள்பட 8 பேர் உள்ளனர். 

முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் தற்போதைய போக்குவரத்து மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சருமான இந்திய வம்சாவளியை சேர்ந்த அனிதா ஆனந்த் பெயர் பிரதமர் பதவிக்கு அடிபடுகிறது. 

இவரது தந்தை ஆனந்த் தமிழ்நாட்டையும், தாய் சரோஜ் பஞ்சாப் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் டாக்டர்கள். அனிதா ஆனந்த் 2019 முதல் 2021ம் ஆண்டு வரை பொதுச் சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சராக இருந்தார்.

கொரோனா காலத்தில் கோவிட்-19 தொற்றுநோயின் உச்சத்தில் மருத்துவ உபகரணங்களைப் பாதுகாப்பதற்கான ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் பங்காற்றினார். 

அதேபோல் இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி.யான ஜார்ஜ் சாகல், பிரதமர் பதவி போட்டியில் உள்ளார். இவர் இயற்கை வளங்களுக்கான நிலைக்குழுவின் தலைவராகவும், சீக்கிய காக்கசின் தலைவராகவும் உள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!