பிரித்தானிய இளைஞனை விடுவிக்கக் கோரி லண்டனில் போராட்டம்
துபாயில் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரித்தானிய இளைஞனை விடுவிக்கக் கோரி, மத்திய லண்டனில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடினர்.
18 வயதான மார்கஸ் ஃபகானா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) நகரத்தில் இருந்தபோது, 17 வயதுக்குட்பட்ட சிறுமியுடன் உடலுறவு கொண்டதற்காக குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார்.
துபாயில் 18 வயதிற்குட்பட்டோர் உடலுறவு கொள்வது சட்டவிரோதமானது. சிறுமியின் தாய் மீண்டும் இங்கிலாந்து திரும்பியதும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் காவல்துறையிடம் உறவைப் புகாரளித்தார்.
பின்னர் அதிகாரிகள் மார்கஸை அவரது ஹோட்டலில் கைது செய்தனர். இரு டீன் ஏஜ் பருவத்தினரும் 16 வயதாக இருப்பதால், இங்கிலாந்தில் இந்த ஜோடியின் உறவு சட்டப்பூர்வமாக இருந்திருக்கும். ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இது குற்றமாகும்.
இந்நிலையில் சுமார் 100 ஆதரவாளர்கள் பாராளுமன்ற சதுக்கத்தில் இருந்து டவுனிங் தெரு வரை “மார்கஸை வீட்டிற்கு அழைத்து வாருங்கள்” என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.