ஜஸ்டின் ட்ரூடோவிடம் தொலைபேசியில் பேசிய ஜோ பைடன்

#PrimeMinister #Canada #America #President
Prasu
19 hours ago
ஜஸ்டின் ட்ரூடோவிடம் தொலைபேசியில் பேசிய ஜோ பைடன்

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை நண்பர் என்று அழைப்பதில் பெருமிதம் கொள்வதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இருவரும் இப்போது தலைமைப் பதவியிலிருந்து விலகத் தயாராகி வரும் நிலையில் பைடன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ட்ரூடோவுடன் தாம் தொலைபேசியில் பேசியதாக பைடன் தெரிவித்துள்ளார்.

தாம் ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர் ட்ரூடூ முதலில் வாழ்த்து கூறியதாக பைடன் நினைவுபடுத்தியுள்ளார். 

காலநிலை மாற்றம் கோவிட்19 பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு சவால்களை தாம் இருவரும் இணைந்து எதிர்கொள்ள நேரிட்டதாக பைடன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!