தெஹிவளையில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

#SriLanka #Arrest #drugs
Prasu
1 year ago
தெஹிவளையில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

தெஹிவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.

தெஹிவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் தெஹிவளை, சுமுது ராஜபக்ஷ மாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 56 கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், படோவிட்ட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து ஒரு கிலோ 320 கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிசை பிரதேசத்தில் வசிக்கும் 28 மற்றும் 46 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4