எல்லை தாண்டி கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நிபந்தனை அடிப்படையில் விடுதலை!

#SriLanka
Mayoorikka
1 year ago
எல்லை தாண்டி கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நிபந்தனை அடிப்படையில் விடுதலை!

எல்லை தாண்டி,தடைசெய்யப்பட்ட இழுவைப்படகை பயன்படுத்தி கடந்த வருடம் நவம்பர் 11ம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட போது கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

 கைது செய்யும் நடவடிக்கையின் போது கடற்படை உத்தியோகத்தர்களைத் தாக்கி கடமைக்கு இடையூறு விளைவித்தமை, கடற்படை படகை சேதப்படுத்தியமை, எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பன்னிரு இந்திய மீனவர்களையும் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

 இதன் போது வழக்கை விசாரித்த நீதவான் கிருசாந்தன் பொன்னுத்துரை கடந்த நவம்பர் 27ம் திகதி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் வழக்கில் நிபந்தனையுடன் விடுவித்து உத்தரவிட்டிருந்தார்.

 ஆனாலும் கடற்படை உத்தியோகத்தர்களைத் தாக்கியமை தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாரினால் மேற்கொண்ட வழக்கில் விளக்கமறியலில் மீனவர்கள் பன்னிருவரும் இன்று 08ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4