அமெரிக்கா செல்லும் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

#PrimeMinister #Canada #America #funeral
Prasu
11 hours ago
அமெரிக்கா செல்லும் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்காவின் வாஷிங்டனுக்கு விஜயம் செய்ய உள்ளார்.

நாளைய தினம் அவர் இவ்வாறு வாஷிங்டனுக்கு விஜயம் செய்வார் என தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டரின் இறுதி கிரியைகளில் பங்கேற்பதற்காக அவர் இவ்வாறு அமெரிக்காவிற்கு விஜயம் செய்கின்றார்.

ஜிமி கார்டர் கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி தனது நூறாவது வயதில் காலமானார். வாஷிங்டனின் தேசிய தேவாலயத்தில் இறுதிக் கிரியை ஆராதனைகள் நடைபெற உள்ளது.

 கனடிய மக்களின் சார்பில் கனடிய பிரதமர் ட்ரூடோ இந்த இறுதிக் கிரியைகளில் பங்கேற்பார் எனவும் இந்த இறுதிக் கிரியை நிகழ்வில் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிடுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!