காட்டுத்தீ காரணமாக கலிபோர்னியாவில் அவசர நிலை பிரகடனம்

#America #StateOfEmergency #WildFire
Prasu
10 hours ago
காட்டுத்தீ காரணமாக கலிபோர்னியாவில் அவசர நிலை பிரகடனம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருவதை அடுத்து ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்த காட்டுத்தீ லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கடற்கரை பகுதியில் இந்த காட்டுத்தீ முதலில் பரவ ஆரம்பித்துள்ளது. கடற்கரை பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், காட்டுத்தீ மலைப்பகுதிகளுக்கு வேகமாக பரவி வருகிறது.

இதனால் அங்கு கடும் புகைமூட்டம் நிலவி வருகிறது. காட்டுத்தீயில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள், வாகனங்கள் நாசமாகின. காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள். 

அப்பகுதி வீடுகளில் வசித்து வந்த 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காற்றின் வேகம் குறையாததால் கலிபோர்னியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக ஆளுநர் கவின் நியூசம் தெரிவித்துள்ளார். 

காற்றின் வேகம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இன்று வரை நிலைமை மோசமாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான மேலதிக தகவல்களை அறிவதற்கு இந்த இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!