டிரம்பின் பதவியேற்பு விழாவுக்காக $1 மில்லியன் நன்கொடை வழங்கிய கூகுள் நிறுவனம்
#America
#President
#google
#Trump
Prasu
1 year ago
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்டு டிரம்ப் வெற்றிப் பெற்றார். அவர் வருகிற 20ந் தேதி அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.
டிரம்பின் பதவியேற்பு விழா அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில் டிரம்பின் பதவியேற்பு விழாவுக்கான நிதியை அமெரிக்க நிறுவனங்கள் வாரி வழங்கி வருகின்றன.
அந்த வகையில் கூகுள் நிறுவனம் டிரம்பின் பதவியேற்பு விழாவுக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலரை நன்கொடையாக வழங்கியுள்ளது.
மேலதிக செய்திகளை அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்