கலிபோர்னியா காட்டுத்தீ - 60 தீயணைப்பு வீரர்களை அனுப்பும் கனடா
கலிபோர்னியா காட்டுத்தீயை அணைக்க 60 தீயணைப்பு வீரர்களை கனடா அனுப்புகிறது.
அமெரிக்காவின் கோரிக்கையின் பேரில் கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க 60 தீயணைப்பு வீரர்களை கனடா அனுப்புவதாக அறிவித்துள்ளது.
கனடாவின் அவசரகால தயார்நிலை மந்திரி ஹர்ஜித் சாஜன் (Harjit Sajjan) இதனை உறுதிப்படுத்தியுள்ளார். "அமெரிக்க நண்பர்கள் காட்டுத்தீயை அணைக்க உதவியை கோரியுள்ளனர்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆல்பர்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களிலிருந்து 60 தீயணைப்பு வீரர்கள் நாளை அனுப்பப்படுவார்கள் எனவும், மேலும் வரவிருக்கும் நாட்களில் கூடுதல் உதவிகளை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கை அண்டை நாடுகளுக்கிடையேயான உதவியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
காலிபோர்னியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடர் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால், பல்வேறு பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலதிக செய்திகளை அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்