நைஜீரியாவில் 40 விவசாயிகள் ஆயுதமேந்திய நபர்களால் சுட்டுக்கொலை
#Death
#GunShoot
#Farmers
#Nigeria
Prasu
10 hours ago
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் வடகிழக்கு பகுதியில் ஆயுதமேந்திய கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன.
பழமைவாதிகளான இவர்கள் மேற்கத்திய கலாசார தழுவலை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.
விவசாயத்தில் நவீனமயமாதலை கொண்டு செயல்பட்டு வரும் விவசாயிகள் வசிக்கும் கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் அங்கு போர்னோ மாகாணத்தின் மோகுன்னே கிராமத்துக்குள் இரவு ஆயுதமேந்திய கும்பல் ஒன்று புகுந்து அங்குள்ள விவசாயி்களை சரமாரியாக சுட்டுவிட்டு தப்பினர்.
இந்த கோர சம்பவத்தில் 40 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உடலில் குண்டு பாய்ந்து செத்தனர். பலர் காயம் அடைந்தனர்.
மேலதிக செய்திகளை அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்