ரஷ்ய ராணுவ தொழிற்சாலை மற்றும் எண்ணெய் கிடங்கு மீது உக்ரைன் தாக்குதல்

#Attack #Russia #Missile #Ukraine #War
Prasu
1 month ago
ரஷ்ய ராணுவ தொழிற்சாலை மற்றும் எண்ணெய் கிடங்கு மீது உக்ரைன் தாக்குதல்

உக்ரைன் நாடு தனது பாதுகாப்புக்காக நேட்டோ அமைப்பில் சேர முயற்சிகள் மேற்கொண்டது. இது தனது நாட்டின் பாதுகாப்புக்கு உகந்ததாக இருக்காது என்று ரஷியா கருதியது. 

இதனால் உக்ரைன் மீது கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ந்தேதி ரஷியா அதிரடியாக போர் தொடுத்தது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக ரஷியா நாடு மீது உக்ரைன் தனது தாக்குதல் வியூகங்களை மாற்றி உள்ளது.

இதையடுத்து தனது பாதுகாப்பை உக்ரைன் பகுதியில் மேலும் பலப்படுத்திய ரஷியா உக்ரைன் மீதான தாக்குதலையும் தீவிரப்படுத்தி வந்தது. 

இந்தநிலையில் நேற்று ரஷியா மீது உக்ரைன் நாடு திடீர் அதிரடி தாக்குதலை மேற்கொண்டது. ரஷியாவில் உள்ள சரடோ, ஏஞ்சல்ஸ், பிரியன்ஸ்க், துலா, டார்ஸ்டன் ஆகிய நகரங்கள் மீது உக்ரைன் நாட்டின் ஏவுகணைகள் நூற்றுக்கணக்கில் சீறிப்பாய்ந்து தாக்கின. 

திடீரென உக்ரைன் ஏவுகணைகள் இத்தகைய பலமுனை தாக்குதலை நடத்தும் என்று ரஷியா எதிர்பார்க்கவில்லை. என்றாலும் சுதாரித்துக் கொண்ட ரஷிய ராணுவம் பதிலடி தாக்குதலை நடத்தியது. 

நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய இந்த தாக்குதல்கள் நடந்தன. அதுபோல ரஷியாவின் விமான எரிபொருள் சேமிப்பு நிலையமான எண்ணை கிடங்கு மீதும் உக்ரைன் குறி வைத்து ஏவுகணைகளை வீசியது. இதில் எண்ணை கிடங்கு தீப்பற்றி எரிந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது

மேலதிக செய்திகளை அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!