பிரான்ஸின் பல மாவட்டங்களுக்கு உறை குளிர் மற்றும் வெள்ள எச்சரிக்கை விடுப்பு

#France #Warning #Flood #Climate #Snow
Prasu
11 months ago
பிரான்ஸின் பல மாவட்டங்களுக்கு உறை குளிர் மற்றும் வெள்ள எச்சரிக்கை விடுப்பு

பிரான்ஸின் பல பகுதிகளின் சீரற்ற காலநிலை தொடர்கிறது. தொடர்ச்சியாக குளிர் அதிகரித்துச் செல்வதுடன், பல மாவட்டங்களில் மழையுடன் கூடிய வெள்ள அனர்த்தமும் இடம்பெற உள்ளது.

Aisne, Ardennes, Aube, Charente, Charente-Maritime, Eure, Eure-et-Loir, Loire-Atlantique, Maine-et-Loire, Marne, Meuse, Oise, Rhône, Sarthe, Seine-Maritime, Seine-et-Marne, Somme மற்றும் Vendée ஆகிய 18 மாவட்டங்களில் வெள்ளம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கடும் குளிர் காரணமாக 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Ain, Allier, Corrèze, South Corsica, Haute-Corse, Creuse, Isère, Loire, Haute-Loire, Puy-de-Dôme, Pyrénées-Orientales, Rhône மற்றும் Saône-et-Loire ஆகிய மாவட்டங்களுக்கு உறை குளிர் காரணமாக ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு அதிகபட்சமாக -7℃ வரை குளிர் நிலவும் எனவும் Meteo France அறிவித்துள்ளது.

மேலதிக செய்திகளை அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!