வெளிநாடுகளில் இருப்பவர்களால் இலங்கையில் அதிகரிக்கும் வன்முறை சம்பவங்கள் - சஜித் வைத்த கோரிக்கை!

#SriLanka #Sajith Premadasa
Thamilini
1 year ago
வெளிநாடுகளில் இருப்பவர்களால் இலங்கையில் அதிகரிக்கும் வன்முறை சம்பவங்கள் - சஜித் வைத்த கோரிக்கை!

இலங்கையில் இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைத் தடுக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் சம்பந்தப்பட்ட சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எம்.பி சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச, இந்த வருடத்தின் முதல் 16 நாட்களில் 05 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்

இதில் 05 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 04 பேர் காயமடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

 வெளிநாடுகளில் வசிக்கும் குற்றவாளிகளால் குற்றச் செயல்கள் ஏற்பாடு செய்யப்படுவதாக பொலிசார் கண்டுபிடித்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், பொலிஸ் திணைக்களத்தின் பிரகாரம், அவ்வாறான 188 குற்றவாளிகளுக்கு INTERPOL சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 இலங்கையில் பாதாள உலக செயற்பாடுகள், கொலைகள் மற்றும் கப்பம் பெறுதல் தொடர்பான சம்பவங்களின் பின்னணியில் தற்போது வெளிநாடுகளில் இருக்கும் 63 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் இருப்பதாக அவர் மேலும் கூறினார். 

 இவ்வாறான குற்றச்செயல்கள் அதிகரிப்பதால் சாதாரண குடிமக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து தடுக்கப்படுவதாகவும், குற்றங்களை குறைப்பதற்கு துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்துவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாச தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4