இங்கிலாந்தில் எரித்ரிய நாட்டு புகலிடக்கோரிக்கையாளரை தாக்கிய நபர்
வெள்ளையர்களே உயர்ந்தவர்கள் என்னும் எண்ணம் கொண்டவரான ஒரு பிரித்தானியர், சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒரு புகலிடக்கோரிக்கையாளரைக் கத்தியால் தாக்கியுள்ளார்.
அவரது செயல்கள் சந்தேகமின்றி தீவிரவாத தாக்குதல் என்று தீர்ப்பளித்து நீதிபதி தண்டனை விதித்துள்ளார்.
இங்கிலாந்திலுள்ள Worcester என்னுமிடத்தில் அமைந்துள்ள ஹொட்டல் ஒன்றில் 25 வயது Nahom Hagos எரித்ரிய நாட்டவரான புகலிடக்கோரிக்கையாளர் உணவருந்திக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த 32 வயது Callum Parslow என்னும் வெள்ளையர், Nahomஐ கத்தியால் நெஞ்சில் குத்தியுள்ளார். கைகளிலும் குத்துவிழுந்தது.
அந்த தாக்குதலால் உடலளவிலும் மனதளவிலும் நிலைகுலைந்துபோனார் Nahom. இந்நிலையில், கைது செய்யப்பட்ட Callumக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் 22 ஆண்டுகள், 8 மாதங்கள் சிறையில் இருக்கும் வகையில் Callumக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தீர்ப்பளித்த நீதிபதியான Mr Justice Dove, Callumஇன் செயல், சந்தேகமின்றி ஒரு தீவிரவாத தாக்குதல் என்று கூறியுள்ளார்.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்