கனடாவில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 8 மாத குழந்தை மரணம்

#Death #Canada #Accident #baby #fire
Prasu
4 hours ago
கனடாவில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 8 மாத குழந்தை மரணம்

கனடாவில் இடம்பெற்ற தீ விபத்தில் சிசுவொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. ஸ்காப்ரோவின் புஷ்மில் சதுக்கத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த விபத்தில் எட்டு மாத சிசுவொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

மேலும் குறித்த வீட்டில் நான்கு வயது குழந்தையொன்றும், 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் இருந்தனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீட்டில் இருந்த அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சிசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் பொலிஸ் தடுப்புக் காவலில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தீ விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!