கொலை முயற்சி குறித்து உருக்கமான பதிவை வெளியிட்ட ஷேக் ஹசீனா

#PrimeMinister #Murder #Bangladesh
Prasu
11 months ago
கொலை முயற்சி குறித்து உருக்கமான பதிவை வெளியிட்ட ஷேக் ஹசீனா

வங்கதேசத்தில் கடந்த வருடம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் வெடித்தது.

அந்நாட்டு சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வந்த 30 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்தும் ஷேக் ஹசீனாவை பதவி விலகக் கோரியும் மாணவர்கள் பல வாரங்களாக நடத்திய போராட்டங்கள் மற்றும் மோதல்களில் 600 பேர் கொல்லப்பட்டனர்.

இறுதியில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவுக்குத் தப்பி வந்தார். பிரதமர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் அனைத்தையும் சூறையாடினர்.

இந்நிலையில் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட தருணத்தில், தன்னையும், தனது தங்கையான ஷேக் ரெஹானாவையும் கொல்ல எதிர்கட்சியினரால் சதி நடந்ததாக 76 வயதாகும் ஷேக் ஹசீனா குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது மேற்கு வங்க அவாமி லீக் கட்சியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் தளத்தில் ஷேக் ஹசீனா பேசும் ஆடியோ உரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த ஆடியோவில், “ரெஹானாவும் நானும் உயிர் பிழைத்தோம். 20-25 நிமிட இடைவெளியில் நாங்கள் மரணத்திலிருந்து தப்பித்தோம்” என்று ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

மேலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நடந்த கொலை முயற்சிகளில் இருந்து தப்பிப்பிழைத்தது கடவுளின் செயல் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். 2004, ஆகஸ்ட் 21 நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல், கோட்டலிபாராவில் நடந்த வெடிகுண்டு தாக்குதல், இறுதியில் நடந்த கொலை முயற்சியில் தப்பித்தது கடவுளின் விருப்பம்.

இல்லையென்றால் நான் இப்போது உயிரோடு இருந்திருக்க மாட்டேன். அவர்கள் என்னை எப்படி கொல்ல திட்டமிட்டனர் என்பதை நீங்கள் பின்னர் பார்த்தீர்கள். நான் எனது நாடு இல்லாமல் இருக்கிறேன், எனது வீடு எரிக்கப்பட்டது, நான் கஷ்டப்பட்டாலும், என்னை கடவுள் உயிருடன் வைத்திருக்க ஒரு காரணம் இருக்கும் என்று நம்புகிறேன் என கண்ணீர் குரலில் ஷேக் ஹசீனா அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!