இந்திய ராணுவ தளவாட தொழிற்சாலையில் வெடி விபத்து – 8 பேர் மரணம்

#India #Death #Factory #Blast #Military
Prasu
2 months ago
இந்திய ராணுவ தளவாட தொழிற்சாலையில் வெடி விபத்து – 8 பேர் மரணம்

மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள இந்திய ராணுவத் தளவாடத் தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடிப்பில் எட்டுப் பேர் உயிரிழந்தனர்.இவ்விபத்தில் மேலும் எழுவர் காயமடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

கட்டடத்தின் கூரை பெயர்ந்து விழுந்ததாகவும் உள்ளே 14 பேர் சிக்கிக்கொண்டதாகவும் கூறப்பட்டது. அவர்களில் இருவர் மீட்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

“வெடிப்பு குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வண்டிகளும் அவசர மருத்துவ வாகனங்களும் அனுப்பிவைக்கப்பட்டன. மீட்புப் பணி தொடர்கிறது. 

பெயர்ந்து விழுந்த கூரை ஜேசிபி இயந்திரத்தின் துணையுடன் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது,” என்று மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறினர்.

வெடிப்பிற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. விசாரணை நடந்து வருகிறது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!