நாளை வெளியாகும் தளபதி 69 படத்தின் பர்ஸ்ட் லுக்

#TamilCinema #Movie
Prasu
1 year ago
நாளை வெளியாகும் தளபதி 69 படத்தின் பர்ஸ்ட் லுக்

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் எச். வினோத் கூட்டணியில் உருவாகும் புதிய படம் "தளபதி 69" என்று தற்காலிகமாக அழைக்கப்படுகிறது. 

இந்தப் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே மற்றும் பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்தப் படம் அக்டோபர் மாத வாக்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி அரசியல்வாதி அவதாரம் எடுத்துள்ள விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் வரும் ஜனவரி 26, குடியரசு தினத்தன்று தளபதி 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக ஒரு வீடியோவாக வெளியிட்டு அறிவித்துள்ளனர். 

'தளபதி 69' படத்திற்கு 'நாளைய தீர்ப்பு' என தலைப்பு வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. இச்செய்தி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4