இங்கிலாந்தை தாக்கிய Éowyn புயல் - மின்சாரமின்றி தவிக்கும் மக்கள்
#Death
#England
#Strom
Prasu
2 months ago

Éowyn புயல் காரணமாக இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து முழுவதும் பயணத் தடை ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர்.
காற்று மணிக்கு 100 மைல் வேகத்தை எட்டியுள்ளது. கிளாஸ்கோவில் உள்ள செல்டிக் பூங்கா காற்றினால் சேதமடைந்துள்ளது. அயர்லாந்தில் ஒரு மரம் கார் மீது விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் கடும் தாக்கத்தினால் விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், ஸ்காட்லாந்தில் அனைத்து ரயில்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
வடக்கு அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்தின் சில பகுதிகளில் சிவப்பு வானிலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



