நாயை தூக்கிலிட தீர்ப்பு: மாங்குளத்தில் இடம்பெற்ற விசித்திர வழக்கு

#SriLanka #Vanni
Mayoorikka
1 year ago
நாயை தூக்கிலிட தீர்ப்பு: மாங்குளத்தில் இடம்பெற்ற விசித்திர வழக்கு

நாயொன்றை மரத்தில் தூக்கிட்டு கொன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில், பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 நாய் ஒன்று தூக்கிலிடப்பட்டதை சித்தரிக்கும் சமூக ஊடகப் பதிவின் பேரில் 48 வயதுடைய பெண்ணை மாங்குளம் பொலிஸார் கைது செய்தனர். மாங்குளத்தைச் சேர்ந்த சந்தேக நபர், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் 1907 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

images/content-image/1737955049.jpg

 இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சசிதா என்ற பெண் தனது ஆடு ஒன்றை நாய் கடித்துவிட்டதாக முறையிட்டுள்ளார், இது இணக்கசபைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில் இணக்கசபையில் இருந்த மூன்று நீதவான்களான ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய அதிபர் யோகேஸ்வரன் (ஓய்வு) சின்னத்தம்பி பாடசாலை அதிபர் நித்தியகலா (ஓய்வு) தபால் உத்தியொகத்தர் மனைவி, கிராம அலுவலரின் தாயான மேகலா ஆகிய மூவரும் நாயை தூக்கிலிட தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

images/content-image/2024/1737955029.jpg

 அத்துடன் குறித்த நாயை தூக்கில் இடுமாறு உத்தரவிட்டுள்ளதுடன், அதன் புகைபடத்தையும் தமக்கு அனுப்புமாறு கோரியுள்ளனர்.


பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4