கொள்கலன்களை விடுவிக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்! வாகன சாரதிகள் சங்கம்

#SriLanka #Import
Mayoorikka
1 year ago
கொள்கலன்களை விடுவிக்காவிட்டால் போராட்டம்  வெடிக்கும்! வாகன சாரதிகள் சங்கம்

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்படும் காலதாமதத்தை இந்த வாரத்திற்குள் தீர்க்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கப்போவதாக கொள்கலன் வாகன சாரதிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

 ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள, இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் கொள்கலன் வாகன சாரதிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

 அடிப்படை சுகாதார வசதிகள் இன்மை உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை சாரதிகள் எதிர்கொள்வதாக தெரிவித்த அவர், இந்த காலதாமதத்தை இந்த வாரத்திற்குள் நிவர்த்தி செய்யாவிட்டால் தொழிற்சங்க போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளனர்.

 தொழிற்சங்க நடவடிக்கையானது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆகிய இரண்டையும் பாதிக்கும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பு இல்லாததால் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

 சுங்கத் துறைக்கு கூடுதலாக, தொடர்புடைய பிற அரசு நிறுவனங்களும் 24 மணி நேரமும் வேலை செய்ய வேண்டும் என்று கூறிய அவர், பிரச்சினையைத் தீர்க்க பாதுகாப்புப் படை வீரர்களை சம்பந்தப்பட்ட பணிகளுக்கு அரசு ஈடுபடுத்த வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4