மத்திய வங்கி வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

#SriLanka #Central Bank
Mayoorikka
1 year ago
மத்திய வங்கி வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது நேற்று (28) நடைபெற்ற அதன் கூட்டத்தில் நாணயக் கொள்கை நிலைப்பாட்டினை தற்போதைய நிலையில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது. அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் ஓரிரவுக் கொள்கை வீதத்தினை (OPR) 8.00 சதவீதமாக பேணுவதற்கு தீரமானிக்கப்பட்டுள்ளது.

 இதேவேளை 2025 ஜனவரியில் அறிவிக்கப்பட்ட மின்சார கட்டண திருத்தத்தில் எதிர்பார்த்ததை விட குறைவான திருத்தம் காரணமாக, முன்னர் கணித்ததை விட எதிர்காலத்தில் ஆழமான பணவாட்டம் ஏற்படக்கூடும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

 அதேபோல், பணவீக்கம் 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து நேர்மறையாக மாறக்கூடும் எனவும் நடுத்தர காலத்தில் 5 சதவீத இலக்கை நோக்கிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4