மைத்திரியின் ரிட் மனு விசாரணைக்கு வருகிறது

#SriLanka
Mayoorikka
1 year ago
மைத்திரியின் ரிட் மனு விசாரணைக்கு வருகிறது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தனக்கு வழங்கப்பட்ட அழைப்பாணையை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனுவை பெப்ரவரி 6ஆம் திகதி முதல் புதிய அமர்வு முன் விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (28) உத்தரவிட்டது. 

 மனுவை விசாரித்த அமர்வின் பல உறுப்பினர்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றதன் காரணமாக, மனுவை விசாரிக்க புதிய அமர்வை நியமிக்க முடிவு செய்யப்பட்ட பின்னர் திகதி நிர்ணயிக்கப்பட்டது.

 இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான தம்மிக்க கணேபொல மற்றும் தமித் தோட்டவத்த ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே திகதி நிர்ணயிக்கப்பட்டது.

 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்த பாதிரியார் சிரில் காமினி மற்றும் ஜேசுராஜ் கணேசன் ஆகியோர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தனிப்பட்ட முறைப்பாடுகளை செய்துள்ளதாகக் கூறும் மனுதாரர், சம்பவம் தொடர்பாக குற்றவியல் குற்றச்சாட்டுகளின் கீழ், முன்னாள் ஜனாதிபதி தன்னை சந்தேக நபராகப் பெயரிடுமாறு கோரியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

 இந்த முறைப்பாட்டை பரிசீலித்த முன்னாள் கோட்டை நீதவான், இந்த முறைப்பாடுகள் தொடர்பாக ஒக்டோபர் 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தனக்கு சம்மன் அனுப்பியுள்ளதாகவும் அதனை இரத்து செய்யுமாறு கோரியே முன்னாள் ஜனாதிபதி இந்த ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4