மகா கும்பமேளா கூட்ட நெரிசல் சம்பவம் - பலி எண்ணிக்கை உயர்வு
#India
#Death
#Crowd
Prasu
2 months ago

இந்தியாவில் இடம்பெறும் மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மற்றுமொரு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் குழந்தைகள் உள்பட 07 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மலைப்பாதையில் உள்ள ஜூசியில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் மற்றும் மூன்று வயது குழந்தை உட்பட ஏழு பக்தர்கள் உயிரிழந்தனர், அதே நேரத்தில் ஒரு டஜன் யாத்ரீகர்கள் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



