துபாய் லாட்டரியில் 2¼ கோடி பரிசு வென்ற இந்தியர்

#Lottery #Dubai #Indian
Prasu
3 hours ago
துபாய் லாட்டரியில் 2¼ கோடி பரிசு வென்ற இந்தியர்

துபாயில் தனியார் நிறுவனம் சார்பில் நடந்த லாட்டரி குலுக்கலில் நெல்லையை சேர்ந்தவர் பீர் முகம்மது ஆதம் என்பவருக்கு ரூ.2¼ கோடி பரிசு அடித்துள்ளது. 

இவா் துபாயில் உள்ள பொதுத்துறை நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். 

தனக்கு லாட்டரியில் பரிசு விழுந்தது குறித்து பீர் முகம்ம்து ஆதம் கூறியதாவது: நான் கடந்த 2007ம் ஆண்டு முதல் துபாயில் வேலை செய்து வருகிறேன். என்னுடைய மனைவியும் மகளும் சொந்த ஊரில் வசித்து வருகிறார்கள். 

துபாயில் 3 ஆண்டுகளாக நண்பர்களுடன் சேர்ந்து லாட்டரி வாங்கி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளில் முதல் முறையாக எங்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

10 லட்சம் திர்ஹாம் பரிசுத்தொகை எனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. எனது நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்து காசோலைகளை அளித்துள்ளேன்" என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!