பிரித்தானியாவில் உடல் பருமன் குறைப்பு மருந்துகளுக்கு விதிக்கப்படும் புதிய கட்டுப்பாடுகள்
பிரித்தானியாவில் உடல் பருமன் குறைப்பு மருந்துகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பிரித்தானியாவின் மருந்தக கட்டுப்பாட்டு அமைப்பு (GPhC), ஓன்லைன் மருந்தகங்களில் உடல் பருமன் குறைப்பு மருந்துகளின் வழங்கலை கட்டுப்படுத்த புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.
இதன் மூலம், மருந்துகளை தவறாக வழங்குவதால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது முக்கிய நோக்கமாக உள்ளது. GLP-1 வகை மருந்துகள் (Wegovy, Mounjaro) உயர் அபாய மருந்துகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
நபர்களின் எடை, உயரம் மற்றும் BMI விவரங்களை சுயாதீனமாக சரிபார்த்த பிறகே மருந்துகள் வழங்க வேண்டும். ஓன்லைன் கேள்வித் தொடர்கள் அல்லது தொலைபேசி அழைப்புகள் மட்டும் இனி சான்றாக போதாது.
வீடியோ ஆலோசனை அல்லது மருத்துவ பதிவுகளின் சரிபார்ப்பு தேவை. 2021 முதல், எடை குறைப்பு மருந்துகளை தவறாக வழங்கிய குற்றச்சாட்டில் ஏராளமான ஓன்லைன் மருந்தகங்கள் மீது GPhC நடவடிக்கை எடுத்துள்ளது.
நோயாளிகளுக்கு பாதுகாப்பாக, சீரான முறையில் மருந்துகளை வழங்க மருத்துவ நிபுணர்களின் நேரடி மதிப்பீடுகள் அவசியம் என்பதே இந்த புதிய வழிகாட்டுதல்களின் நோக்கம்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்