பெண்கள் விளையாட்டுகளில் திருநங்கைகள் பங்கேற்பதற்கு தடை!

#SriLanka #sports
Thamilini
10 months ago
பெண்கள் விளையாட்டுகளில் திருநங்கைகள் பங்கேற்பதற்கு தடை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பெண்கள் விளையாட்டுகளில் திருநங்கைகள் பங்கேற்க தடை விதித்துள்ளார். 

 இது தொடர்பான நிர்வாக உத்தரவு நேற்று (05) கையெழுத்தானது. 

 இந்த நிகழ்வில் இளம் விளையாட்டு வீரர்கள் குழுவும் பங்கேற்றனர். ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்றதிலிருந்து அவர் கையெழுத்திட்ட நான்காவது நிர்வாக உத்தரவு இது என்று கூறப்படுகிறது. 

 ஆகஸ்ட் மாதம் பாரிஸ் ஒலிம்பிக்கில் தனது பாலினத்திற்காக கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான அல்ஜீரிய பெண் குத்துச்சண்டை வீராங்கனை இமான் கெலீஃப் குறித்தும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்தார்

. "ஆண்கள் பெண்களைப் போல நடிப்பது" மற்றும் "வெற்றிகளைத் திருடுவது" பற்றியும் அவர் பேசியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

ஜனாதிபதியின் இந்த உத்தரவானது  பெண்களுக்கு தடகள வாய்ப்புகளில் பாதுகாப்பான மற்றும் சமமான அணுகலை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டதாக நிர்வாக உத்தரவில் பணிபுரியும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!