கனடாவின் மார்க்கம் பகுதியில் தீ விபத்து - வயோதிபர் ஒருவர் பலி

கனடாவின் மார்க்கம் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் வயோதிபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சுமார் 70 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இவ்வாறு தீ விபத்தில் உயிரிழந்து உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
பில்லர் ரொக் மற்றும் ஹெஸெல்டென் வீதிகளுக்கு அருகாமையில் இந்த வீடு தீ விபத்துக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
வீட்டில் வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் தீப்பற்றிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வீட்டில் இருந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட பெண் வீட்டில் மற்றுமொருவர் இருப்பதாக கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து தீயணைப்பு படையினர் வீட்டிற்குள் சென்று தேடிய போது நபர் ஒருவர் இருப்பதனை அவதானித்து உள்ளனர். எனினும் குறித்த நபர் தீ விபத்தில் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



