ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் மற்றும் அவரது மகன் விடுதலை
![ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் மற்றும் அவரது மகன் விடுதலை](https://ms.lanka4.com/images/thumb/1738956921.jpg)
பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் மகன் ஹம்சா ஷெபாஸ். பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியாக இருந்த அவர் கடந்த 2018ல் சர்க்கரை ஆலை ஒப்பந்தத்தை தனது தம்பி சுலேமானுக்கு வழங்கினார்.
இதன்மூலம் சுமார் ரூ.6 கோடி வரை மோசடி நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மற்றும் ஹம்சா ஷெபாஸ் ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இதுதொடர்பான வழக்கில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். எனினும் இந்த வழக்கின் விசாரணை லாகூர் கோர்ட்டில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் வழக்கை வாபஸ் பெறுவதாக புகார்தாரர் அறிவித்தார். இதனையடுத்து ஊழல் வழக்கில் இருந்து பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகன் ஹம்சா ஷெரீப் ஆகிய இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/you.png)
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/fb.png)
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/ins.png)
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/tiktok.png)