சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
குருநாகல் பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் மாவதகம பொலிஸ் பிரிவின் பரகஹதெனிய சந்திக்கு அருகில் நேற்று (07) காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
வரி செலுத்தாமல் நாட்டிற்கு இறக்குமதி செய்த 3,800 வெளிநாட்டு சிகரெட்டுகளையும் சிறப்பு அதிரடிப் படை பறிமுதல் செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 59 மற்றும் 30 வயதுடையவர்கள், பரகஹதெனிய மற்றும் வத்தேகம பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
சம்பவம் தொடர்பில் மாவத்தகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



