யாழில் திடீர் சுகவீனம் காரணமாக குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - தாவடி பகுதியில் வாத்தி எடுத்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்.தாவடி தெற்கு, கொக்குவிலைச் சேர்ந்த திரவியம் சிறிதரன் என்ற 53 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபையின் கோண்டாவில் சாலையில் சாரதியாகக் கடமையாற்றும் அவர் பணிக்கு சென்ற நிலையில் மயக்கம் ஏற்பட்டதன் காரணமாக வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.
பின்னர் வீட்டில் வாந்தி எடுத்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டார். இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



