மாலியில் இராணுவ தொடரணியை குறிவைத்து தாக்குதல் : 25 பொதுமக்கள் பலி!

மாலியின் இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட வாகனத் தொடரணியின் மீது துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தியதில், 25 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் வடகிழக்கில் உள்ள மிகப்பெரிய நகரமான காவோவிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் (18 மைல்) தொலைவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த ஆண்டு பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிகக் கொடூரமான தாக்குதல் இதுவாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 60 வாகனங்களைக் கொண்ட தொடரணியை தாக்குதல் நடத்தியவர்கள் குறிவைத்ததாக இராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் மேஜர் சோலிமனே டெம்பேலே அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு வீரர்கள் உதவியதாகவும், காயமடைந்த 13 பேரை காவோ மருத்துவமனைக்கு மாற்றியதாகவும் அவர் கூறினார்.
இந்தத் தாக்குதலுக்கு எந்த ஆயுதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



