யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் : இருவர் படுகாயம்!
#SriLanka
#Jaffna
Thamilini
11 months ago
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் காயமடைந்துள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து இந்த மாணவர்களுக்கு இடையே ஒரு மோதல் வெடித்துள்ளது.
பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் மூன்றாம் ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களின் இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்