உலக அரசுகளுக்கான உச்சி மாநாடு; டுபாய் பறந்தார் ஜனாதிபதி

#SriLanka #Sri Lanka President #Dubai #President Anura
Mayoorikka
1 month ago
உலக அரசுகளுக்கான உச்சி மாநாடு; டுபாய் பறந்தார் ஜனாதிபதி

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள 2025 ஆம் ஆண்டு உலக அரசுகளுக்கான உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று திங்கட்கிழமை (10) கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்றைய தினம் காலை 10.10 மணியளவில் எமிரேட்ஸ் விமான சேவையின் E. K - 651 விமானத்தின் மூலம் துபாய்க்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

 ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் வலுச்சக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி உட்பட 13 அதிகாரிகள் துபாய்க்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 13 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!