தையிட்டி விகாரை அடிக்கல் நாட்டிய புகைப்படங்கள்

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு அப்போது இராணுவத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதி அடிக்கல் நட்டிருந்தார்.
கோட்டாபய ராஜபக்சே அதிகாரத்திலுருந்த போது ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் 2021 ஆம் ஆண்டு கட்டப்பட்ட 100 அடி உயரமான தூபி (Stupa) மற்றும் 2017 ஆம் ஆண்டு மைத்திரி-ரணில் காலத்தில் ஆளுநராகவிருந்த ரெஜினோல்ட் குரே தலைமையில் கட்டப்பட்ட விகாரை. வலி. வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விகாரையை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டதுடன் கட்டுமானப் பணிகளை அனுமதிப்பதில்லை என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
எனினும் கடும் எதிர்ப்பையும் மீறி காங்கேசன்துறை திஸ்ஸ ரஜமஹா விகாரை அமைக்க இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவால் அடிக்கல் நடப்பட்டது. விகாரை கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் விகாரையின் கட்டுமானப் பணிகள் தொடர்பில் இராணுவத் தளபதி என்று கள ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார் என்று 2022 ஆம் ஆண்டு ஒரு செய்தித்தளம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



