சர்வதேச நாணய நிதிய நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரதமருடன் சந்திப்பு!

#SriLanka #PrimeMinister #IMF
Mayoorikka
11 months ago
சர்வதேச நாணய நிதிய நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரதமருடன் சந்திப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

 இலங்கையின் வரிக் கொள்கை, வரி வருவாயை திறம்பட நிர்வகித்தல் மற்றும் பொதுத்துறை செயல்திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய பொருளாதார விடயங்கள் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

 பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான கொள்கை முயற்சிகளை வலியுறுத்தி, அரசாங்கத்தின் எதிர்கால வளர்ச்சி நிகழ்ச்சி நிரலையும் பிரதமர் இதன்போது கோடிட்டுக் காட்டினார். சர்வதேச நாணய நிதியத்தின் மாற்று நிர்வாக இயக்குனர் கலாநிதி பி.கே.ஜி. ஹரிச்சந்திராவும் இக் கலந்துரையாடலில் பங்கேற்றார்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
https://youtu.be/LPT5PcfCP6M