உலக அரசாங்க உச்சி மாநாட்டில் இன்று உரையாற்றும் ஜனாதிபதி!

#SriLanka #AnuraKumara
Dhushanthini K
3 hours ago
உலக அரசாங்க உச்சி மாநாட்டில் இன்று உரையாற்றும் ஜனாதிபதி!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (12) உலக அரசாங்க உச்சி மாநாட்டில் உரையாற்ற உள்ளார். 

 2025 உலக அரசாங்க உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஜனாதிபதி, நேற்று (11) உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக பல அரச தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

 ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்புக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

 இலங்கை அரசியலில் அரசாங்கம் பெற்ற வெற்றிக்காக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 இதற்கிடையில், முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேருக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையில் ஒரு சந்திப்பு நடைபெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

 பல்வேறு துறைகளில் ஐக்கிய இராச்சியத்திடமிருந்து நிபுணத்துவத்தையும் பயிற்சியையும் பெறுவதற்கான இலங்கையின் திறனை டோனி பிளேர் எடுத்துரைத்தார். இதற்கிடையில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, டவ் ஜோன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அல்மர் லத்தூரையும் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!