அர்ச்சுனாவின் தாக்குதலுக்கு இலக்கானவருக்கு அறுவை சிகிச்சை..!

#SriLanka #Hospital
Mayoorikka
11 months ago
அர்ச்சுனாவின்  தாக்குதலுக்கு இலக்கானவருக்கு அறுவை சிகிச்சை..!

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நபர் தற்போது அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை செய்திகள் தெரிவிக்கின்றன.

 இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்றையதினம்(11) இரவு அர்ச்சுனா எம்.பிக்கும் அங்கு வந்த மற்றுமொரு இளைஞர் குழுவுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது அர்ச்சுனா எம்பி, நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

 நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எம்.பி தனது கையக்க தொலைபேசியில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது, ​​அதை எதிர்த்த இரண்டு நபர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்போது அர்ச்சுனா எம்.பி, ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

 எனினும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரும் தாக்கப்பட்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்கு முன்னர் சம்பவ இடத்தில் நடந்த வாக்குவாதம் தொடர்பிலான வீடியோவை எம்பி அர்ச்சுனா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!