தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பில் பௌத்தசாசன அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை!
தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பில் இராணுவத்தினருடனும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக பௌத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தேசிய ஐக்கியம் தொடர்பில் உணர்வுபூர்வமானதாக காணப்படுவதை கருத்தில் கொண்டு, இது தொடர்பில் காணப்படும் குழப்பங்களிற்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக பௌத்தசாசன அமைச்சின் செயலாளர் அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.
இராணுவம் தற்போது அந்த ஆலயத்தை நிர்வகித்து வந்தாலும் அரசாங்கம் பௌத்த விவகாரங்களிற்கான ஆணையாளர் அலுவலகத்தின் கீழ் இந்த விகாரையை பதிவு செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவம் தற்போது ஆலயத்தை நிர்வகிக்கின்றது, தற்போது அங்கு கட்டுமானப்பணிகள் இடம்பெறுகின்றன, பௌத்த மதகுரு ஒருவர் அங்கு தங்கியுள்ளார், பாதுகாப்பு அமைச்சு தன்னால் அதனை தொடர்ந்து நிர்வகிக்க முடியாது, பௌத்தவிவகாரங்களிற்கான ஆணையாளர் அலுவலகத்தின் கீழ் இந்த விகாரையை பதிவு செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது என அவர் தெரிவித்துள்ள இந்த பெயரில் விகாரையொன்று ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்,
ஆனால் அங்கு நிலம் மட்டுமே உள்ளது, மேலும் இராணுவத்தினரும் கடற்படையினரும் இரண்டு பௌத்த ஆலயங்களை நிர்வகிக்கின்றனர் என தெரிவித்துள்ளனர், இது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது, இராணுவத்தினால் அதனை நிர்வகிக்க முடியாவிட்டால் அதற்கு தீர்வை காண்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்