இராமநாதன் அர்ச்சுனாவிடம் யாழ் பொலிஸார் தீவிர விசாரணை!

#SriLanka
Mayoorikka
4 hours ago
இராமநாதன் அர்ச்சுனாவிடம் யாழ் பொலிஸார் தீவிர விசாரணை!

யாழ்ப்பாண நகரில் உள்ள உணவகம் ஒன்றில் இளைஞன் ஒருவரை அடித்த சம்பவம் தொடர்பில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 பாராளுமன்ற உறுப்பினரால் தாக்கப்பட்டதாகக் கூறி இளைஞன் ஒருவர் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இராமநாதன் அர்ச்சுனா தனது சட்டத்தரணியுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சென்றிருந்தார்.

 இதன்போது, ஒரு காணொளி தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறிச் சென்றதை அடுத்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளதுடன், அங்கு பொருத்தப்பட்டிருந்த கெமராவிலும் பதிவாகி இருந்தது.

 இதை அடிப்படையாக வைத்து தற்போது அர்ச்சுனாவுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!