யாழ்-சென்னை விமான சேவையை மேலும் அதிகரிக்க இண்டிக்கோ நிறுவனம் தீர்மானம்!
#SriLanka
Mayoorikka
11 months ago
இந்தியாவின் சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் வரை முன்னெடுக்கப்பட்டு வரும் விமான சேவைகளை மேலும் அதிகரிப்பதற்கு இந்திய விமான நிறுவனமான இண்டிகோ தீர்மானித்துள்ளது.
இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகத்துக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இண்டிகோ விமான நிறுவனத்தின் ஊடாக சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே வாரத்திற்கு ஐந்து நாட்களுக்கு ஒரு விமானத்தை இயக்குகிறது.
இந்தநிலையில், எதிர்காலத்தில் மேலும் இரண்டு நாட்கள் கூடுதலாக ஒரு விமானத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்