இன்று காதலர் தினம்! ஆதலால் காதல் செய்வீர்...

இன்று காதலர் தினம்... காலம், வயது, நிறம், இனம், சாதி, இனம், மொழி என இவ்வகை பிரிவினையில், இடர்பாடுகளிலும் சிக்காத ஒரே உணர்வு காதல் மட்டுமே. அந்த காலத்து காதல் மென்மையானது, இந்த காலத்து காதல் மோசமானது என்றெல்லாம் இல்லை.
காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்பம் மாறி, வளர்ச்சி அடைவது போல, காதலை வெளிப்படுத்தும் முறை மட்டுமே மாற்றம் கண்டு வருகிறது. புறா மூலம் தூது அனுப்பிய காலம் முதல், வாட்ஸ்-அப் சாட்டிங்-ல் வாழ்ந்து வரும் காலம் வரை..
. இன்றும் காதலி மடி சாய்ந்து, காதலன் முடி கோதி கொஞ்சும் முறையில் எள்ளளவும் மாற்றம் கண்டிடவில்லை எக்காலத்து காதலர்களும்...முள்ளும் மலருமாக சின்ன சின்ன சண்டைகள் பெரிய பெரிய சந்தோசங்கள் நிறைந்து காதல் புரிகின்றார்கள்...
ஆம் பிப்ரவரி மாதம் என்று சொன்னதுமே நினைவுக்கு வருவது காதலர் தினம் தான். அந்த அளவுக்கு பிப்ரவரி மாதத்தில் காதலை கொண்டாடி மகிழ்வதற்கு ரோஸ் டே முதல் காதலர் தினம் வரை பல நாட்கள் உள்ளன. தங்கள் காதலை, காதலர் தினத்தன்று தான் சொல்ல வேண்டும் என்று பலரும் விரும்புவார்கள். உண்மையில் இந்த காதலர் தின கொண்டாட்டம் எப்படி துவங்கியது இதன் வரலாறு என்ன தெரியுமா?
நாம் தற்போது கொண்டாடிக் கொண்டிருக்கும் வலன்டைன் வீக், காதலர் தினம், அதற்கு முந்தைய நாட்களின் கொண்டாட்டத்துக்கும், காதலர் தின கொண்டாட்டம் துவங்கிய காரணத்துக்கும் வரலாற்றில் சுவாரஸ்யமான ஒரு நிகழ்வு கூறப்படுகிறது காதலர் தின கொண்டாட்டம் மூன்றாம் நூற்றாண்டில் ரோமானிய அரசர்களின் ஆட்சிக் காலத்திலேயே துவங்கியது என்று வரலாற்று குறிப்புகளும் ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.
ஒரு பாதிரியாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இறந்த நாளை, அவரை நினைவு கூறும் விதமாகத் தான், வேலண்டைன்ஸ் கொண்டாட்டம் தொடங்கியது! காதலர் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
து அன்பு மற்றும் பாசத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாள். ஆனால் உலகெங்கிலும் பரவலாகக் கொண்டாடப்படும் இந்த நாளின் வரலாறு பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா? சரி வாருங்கள் இந்த பதிவில் காதலர் தினத்தின் வரலாற்றை கொஞ்சம் அலசி ஆராய்வோம். காதலர் தினத்தின் தோற்றம் பேரரசர் இரண்டாம் கிளாடியஸ் ஆட்சியின் போது பண்டைய கால ரோமிலிருந்து வந்ததாக அறியப்படுகிறது. கிபி 3ம் நூற்றாண்டில் திருமணமாகாத வீரர்கள் சிறந்த போர்வீரர்களாக உருவாகிறார்கள் என நம்பி, இரண்டாம் கிளாடியஸ் இளைய போர் வீரர்கள் திருமணம் செய்து கொள்வதைத் தடை செய்தார். இருப்பினும் ‘Valentine’ என்ற ரோமானிய பாதிரியார், இந்த உத்தரவை மீறி ரகசியமாக திருமணங்களை நடத்தி வைத்தார். ஆனால் அவரது செயல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மரண தண்டனைக்கு முன்பாக ஜெய்லரின் மகளைக் காதலித்து, தான் விடைபெறப் போவதை கடிதத்தில் எழுதி, “From Your Valentine” எனக் கையொப்பமிட்டு அனுப்பினார். அந்த அன்பின் வெளிப்பாடு, இன்றளவும் காதலர் தினத்திற்கு கொடுக்கப்படும் கிரீட்டிங் கார்டு வாயிலாகப் பின்பற்றப்படுகிறது. கிறிஸ்துவத்தின் பங்களிப்பு: ஒரு கட்டத்தில் ரோமானியப் பேரரசு முழுவதும் கிறிஸ்தவ மதம் பரவியதால், பிப்ரவரி 13 முதல் 15 வரை கொண்டாடப்பட்ட ‘லுபர்காலியா’ எனப்படும் ஒருவகைத் திருவிழா, படிப்படியாக கிறிஸ்தவ பண்டிகை நாளாக மாற்றப்பட்டது.
கிபி 5ம் நூற்றாண்டில் போப் ஒன்றாம் கொலாஷியஸ், புனித வாலன்டைனின் தியாகத்தைப் போற்றும் வகையில், பிப்ரவரி 14-ஆம் தேதியை புனித காதலர் தினமாக அறிவித்தார். காலப்போக்கில் இந்த நாள் காதல் தொடர்புடையதாக மாறி, அன்பை வெளிப்படுத்தும் விதமாக, வாழ்த்து அட்டைகள் மற்றும் பரிசுப் பொருட்களை பரிமாறிக் கொள்வதற்கு பிரபலமடைந்தது. Courtly Love: இடைக்காலத்தில் Courtly Love என்ற கருத்து ஐரோப்பாவில் தோன்றியது.
ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் தங்களின் விருப்பத்தை தைரியமாக வெளிப்படுத்தும் ஒரு உன்னத பாரம்பரியம் இது. இந்த நாளில் ஆண்கள் அவர்கள் விரும்பும் பெண்களுக்கு மலர்கள் மற்றும் கையால் எழுதப்பட்ட காதல் கவிதைகளை எழுதி வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். இது அன்பைப் பரிமாறிக்கொள்ள ஒரு சந்தர்ப்பமாக மாறியது. 17 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் காதலர் தின அட்டைகளைப் பரிமாறிக் கொள்ளும் பாரம்பரியம் வேகம் பெற்றது. காதல் செய்திகள் மற்றும் வசனங்களுடன் Valentine’s என எழுதப்பட்ட அட்டைகளை மக்கள் பரிமாறிக் கொண்டனர். இந்த அட்டைகள் தொடக்க காலத்தில் ரிப்பன்கள் மற்றும் சரிகைகளால் அலங்கரிக்கப்பட்டது. பின்னாளில் அச்சடிக்கப்பட்ட அட்டைகளின் வருகையால் பெருமளவில் இந்த விஷயம் பிரபலமாகி, ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பல நூறு ஆண்டுகளாக காதலர் தினம் தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்து, 19ஆம் நூற்றாண்டில், வாழ்த்து அட்டைகளை அனுப்பும் நடைமுறை அமெரிக்காவிலும் பரவியது. 1840களில் ‘Mother Of American Valentine’ என்று அழைக்கப்படும் எஸ்தர் ஹவ்லாந்து, அதிகப்படியான காதலர்களை ஒன்று சேர்த்து வைத்தது மூலமாக, பிப்ரவரி 14ல் சாக்லேட்டுகள், பூக்கள் மற்றும் பரிசுகள் பெரும் வணிகமயமாக்கப்பட்டது.
அன்று முதல் இன்று வரை உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் காதலர் தினம் கொண்டாடப்பட்டு, கலாச்சார எல்லைகளைக் கடந்து உலகளாவிய அன்பின் கொண்டாட்டமாக மாறியுள்ளது. எனவே இந்த பிப்ரவரி 14ல் உங்கள் இதயத்தில் சிறப்பான இடத்தைப் பிடித்தவர்களுடன், அற்புதமான நினைவுகளை உருவாக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள்.
பிப்ரவரி 14 பறவைகளின் இனச்சேர்க்கை பருவத்தின் தொடக்கமாக பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தில் பொதுவாக நம்பப்பட்டது.
இது காதலர் தினத்தை, காதலுக்கான ஒரு நாளாக இருக்க வேண்டும் என்ற கருத்து உருவாக முக்கிய காரணமானது.
இடைக்காலத்திலேயே காதலர் தின வாழ்த்துக்கள் பிரபலமாக இருந்தாலும், எழுதப்பட்ட காதலர் தின வாழ்த்துக்கள் 1400ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் ஆரம்பமாகத் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு காதலர் தினத்தில் உலகமே காதலால் நிரம்பியுள்ளது. இந்த மாசற்ற அன்பே மனிதத்தை அடுத்த தளத்துக்குக் கொண்டுசெல்கிறது. ஆதலால் காதல் செய்வீர்
இந்த செய்தியை ஒலி வடிவில் கேட்க
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



